Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவரே போகாதீங்க பிளீஸ்….! “நான் வெளியே போகிறேன்” ஜிபி முத்து எடுத்த முடிவு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

டிக் டாக் செயலியில் தனது பயணத்தைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்டவர்தான் ஜி.பி.முத்து. துவக்கத்தில் வெறுத்தவர்கள் அனைவரையும் தனது ரசிகர்களாக்கி கோலோச்சி வருகிறார் இவர். டிக் டாக் முடக்கப்பட்டதை தொடர்ந்து யூடியூபில் கலக்கியவர் தற்போது பிக் பாஸில் நுழைந்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி வீட்டிற்கு செல்வதாக தகவல் வெளியாகி இருந்தது. அதன்படி ஜிபி முத்து பிக் பாஸிடம் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர வேண்டும். அதையே விரும்புவதாக குறிப்பிடுகிறார்.

இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து வெளியேற வேண்டும் எனவும், என்னுடைய தம்பியிடம் நான் பேச வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். முழுமையாக என்ன நடந்தது என்பது குறித்து நிகழ்ச்சி பார்த்தால் தான் தெரியவரும். இந்த ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் தலைவரே போகாதீங்க ப்ளீஸ் என்று அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |