நேற்று நாடு முழுவதும் 73-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏற்கனவே தலைவர்களின் சிலைக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களில் கண்டிப்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று முதல்வர் கடந்த வருடம் உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும் நேற்று சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் முக்கிய தலைவர்களின் சிலைகள் விடுபட்டிருந்தது. இதுகுறித்து மக்கள் தொடர்பு துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று மாலை அதிகாரிகள் அவசர அவசரமாக விடுபட்ட சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.