தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அண்ணா , பெரியார் போன்ற திராவிட தலைவர்களின் சிலைகள் மீது காவி சாயம் பூசுதல், காவி துண்டு அணிவித்தல் உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனைத்து அரசியல் தலைவர்களின் சிலைக்கும் கூண்டு அமைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி, “தமிழகத்தில் தலைவர்கள் சிலைகளுக்கு கூண்டுகள் அமைத்துள்ளது பெருமை ஆகாது . எங்கோ எப்போதோ நடந்த அசம்பாவிதங்களுக்காக கூண்டு அமைப்பது சரியான மாற்று அல்ல.அசம்பாவிதங்களை தவிர்க்க தலைவர்கள் சிலை உள்ள பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தலாம்” என்று வலியுறுத்தியுள்ளார்.