நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று சொன்னால் எந்த மாற்றம் ஆட்சி வரவேண்டும் என்று சொல்கிறீர்கள் ? திராவிட முன்னேற்றக் கழகம் வரக்கூடாது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். கமல் சார் மாற்று ஆட்சி என்றால் எந்த மாற்று ஆட்சியை சொல்கிறார்.
திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். உலகத்திலே இந்தியா பார்க்கும் போது கொரோனா பிரச்சனையில் 71 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பியது பாஜக, பிரதமர் மோடி. உலகத்தில் அத்தனை தலைவர்கள் மோடியை பார்த்து வணங்கி ஒரு தலைவர் இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்,
அதை விட சொல்வதற்கு வேறு எதுவுமில்லை. எனக்கு நண்பர்கள் எந்த காலத்திற்கும் நண்பர்களாக தான் இருக்கிறார்கள். என்னுடைய தேர்தல் பிரச்சாரத்திற்கு அனைத்து கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் இருக்கிறார்கள், அதுவே போதும், அதுவே என்னுடைய மிகப்பெரிய பலம். ரஜினி சாருக்கு நேரில் போய் ஆதரவு கேட்க வில்லை என்றாலும், ரஜினி சாருடைய ஆதரவு என்றைக்குமே எனக்கு உண்டு, அது எனக்கு நன்றாகவே தெரியும் என குஷ்பு தெரிவித்தார்.