பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரோமோவில் தலைவர் பதவிக்கான போட்டியில் அர்ச்சனா,ரம்யா,பாலா மூவரும் கலந்து கொண்டுள்ளனர் .
பிக்பாஸ்-4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவராக அர்ச்சனா,ரம்யா,பாலாஜி மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் டாஸ்க்கில் சுவாரசியம் குறைவாக செயல்பட்ட போட்டியாளராக சிவானி ,கேபி இருவரும் தேர்வு செய்யப்பட்டு ஓய்வறைக்கு அனுப்பப்பட்டனர் .
இந்நிலையில் இன்றைய முதல் புரோமோவில் தலைவர் பதவிக்கான போட்டியில் ரம்யா ,பாலா ,அர்ச்சனா மூவரும் பங்கேற்றுள்ளனர். மேலும் மூவரும் போட்டியில் வெறித்தனமாக விளையாடுகிறார்கள். போட்டியின் இறுதியில் அர்ச்சனா வெற்றி பெற்று இந்த வார பிக்பாஸ் வீட்டில் தலைவர் ஆகியுள்ளார் .