Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவர் பதவி போட்டியில் ஆரி, ரியோ, சோம் … வெற்றி பெற்றது யார் தெரியுமா?… வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் கொடுக்கப்பட்ட பால் கேட்ச் டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். நேற்றைய எபிசோடில் தங்க நிற பந்துகளை பிடிக்க போட்டியாளர்கள் போராடினர். பின்னர் தங்க நிற பந்தை பிடித்தவர்கள் போர்டில் வைக்கப்பட்ட சக்திகளைப் பயன்படுத்தி மதிப்பெண்களை மாற்றியமைத்துக் கொண்டனர். இப்படி சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்று வெளியான முதல் புரோமோவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆட்டம் ,பாட்டம், பரிசுகள், உணவுகள் என கோலாகலமாக கொண்டாடினர் போட்டியாளர்கள்.

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் தலைவர் பதவிக்கான போட்டியில் ஆரி ,ரியோ, சோம் ஆகிய மூவரும் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில் வாயில் ஸ்பூனை வைத்துக்கொண்டு அதில் தர்மாகோல் பால்களை போட்டு ஸ்னோ மேன் தலைப்பகுதியை நிரப்பவேண்டும் . இதில் மூவரும் சிறப்பாக விளையாடுகின்றனர் . இறுதியில் ஆரி வெற்றி பெறுவது போல புரோமோ நிறைவடைகிறது.

Categories

Tech |