ரஜினி, நெல்சன் கூட்டணியில் உருவாகும் படம் பற்றி வெளியான தகவலால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிக எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் ஏமாற்றத்தை தந்துள்ளது. படத்தில் கதை சுவாரஸ்யமாக இல்லாததுதான் படத்திற்கு பின்னடைவாக இருக்கின்றது என ரசிகர்கள் கூறுகின்றனர். விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடினாலும் பொதுவாக கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. நெல்சன் அடுத்ததாக ரஜினியின் தலைவர் 169 வது படத்தை இயக்க உள்ளார்.
இந்தப் படத்திற்கான அறிவிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக வெளியாகியது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் பின்னடைவு ரஜினியை சற்று யோசிக்க வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பீஸ்ட் திரைப்படம் பல விமர்சனங்களை சந்தித்து இருப்பதால் சன் பிக்சர்ஸ் கவலையில் இருக்கின்றது. இதனால் நெல்சனை வைத்து படம் பண்ணலாமா? வேண்டாமா” என்ற முடிவை ரஜினியிடம் சன் பிக்சர்ஸ் ஒப்படைத்து விட்டதாம். நெல்சன் இத்திரைப்படத்தை இயக்கவில்லை என்றால் அட்லீ இயக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் இதெல்லாம் வதந்தியே, ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன்தான் இயக்க உள்ளார் என ரசிகர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.