நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் நெல்சன். அவர் தற்போது இயக்கிய விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதற்கு அடுத்ததாக ரஜினி நடிக்கும் 169 ஆவது படத்தை நெல்சன் இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பீஸ்ட் படம் வசூல் ரீதியாக வெற்றி அடைந்தாலும் படம் பற்றிய சில நெகட்டிவ் கருத்துகள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
இதனால் ரஜினி படத்தை நெல்சன் இயக்குவது சந்தேகம் தான் சில வதந்திகள் பரவி வந்தது. இதனை மறுக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில், தான் இயக்கத்தில் உருவான படங்களின் பட்டியலில் தலைவர் 169 என்பதையும் சேர்த்திருக்கிறார். எனவே இதன் மூலமாக ரஜினி படத்தை இயக்குவதில் எந்த மாற்றமும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.