Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைவர் 170” ரஜினிகாந்த் எடுத்த திடீர் அதிரடி முடிவு…. அதிர்ச்சியில் கோலிவுட் வட்டாரங்கள்….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. கடந்த 2010-ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினியின் படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசை அமைப்பில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்குப் பிறகு ரஜினியின் 170-வது படத்தை டான் படத்தை இயக்கிய சிபிச் சக்கரவர்த்தி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படும் நிலையில், 170 ஆவது படத்தில் தன்னுடைய சம்பளத்தை ரஜினி அதிரடியாக குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜெய்லர் படத்தில் 85 கோடி சம்பளம் வாங்கும் ரஜினி 170-வது படத்தில் 70 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ரஜினிகாந்த் தன்னுடைய படங்கள் சரிவர ஓடாத காரணத்தினால் சம்பளத்தை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கோலிவுட் வட்டாரங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் படம் ஓடாவிட்டால் சம்பளத்தை குறைத்து தானே ஆகவேண்டும் என சில ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |