வெற்றிலையின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
அடிக்கடி தலை வலிக்கிறதா? கவலை வேண்டாம் இரண்டு வெற்றிலைகளை கசக்கி சாறாக எடுத்து அதில், கற்பூரத்தைச் சேர்த்துக் குழைத்து வலி இருக்கும் இடத்தில் தடவுங்கள் தலைவலி முற்றிலுமாக காணாமல் போய்விடும்.
முற்றிய வெற்றிலை சாற்றில் இரண்டு மிளகு, சிறிதளவு சுக்கு சேர்த்து தேனோடு கலந்து சாப்பிட்டு வர, மூச்சு திணறல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
அதேபோல், வெற்றிலையில் இரண்டு மிளகுகளை வைத்து மட்டும் சாப்பிட்டு வந்தால், தீராத இருமலும் கட்டுப்படும்.
தேள் கடிக்கு கூட வெற்றிலை சிறந்த மருந்தாக திகழ்கிறது.