தலைவலி என்று கூறிய பெண்ணை வார்டு பாய் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சிகிச்சை மையம் ஒன்றில் கொரோனா பாதிக்கப்பட்டவர் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். அந்த மருத்துவமனையில் பல நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் ஆண் பெண் என்று தனியாக அறை ஒதுக்கப்படாமல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் வார்டில் இருந்த 36 வயதான ஒரு வார்டு பாய் அந்த பெண்ணை அடிக்கடி நோட்டமிட்ட சென்றுள்ளார். இதை தொடர்ந்து அந்த பெண் இரவில் தனக்கு அதிகமாக தலைவலி இருப்பதாக அட்டெண்டெரிடம் கூறியுள்ளார்.
இதை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு அந்த நபர் அந்த பெண்ணிடம் பேசி தலைக்கு மசாஜ் செய்யத் தொடங்கியுள்ளார். அப்பொழுது அந்தப் பெண் தூங்க ஆரம்பித்துள்ளார். பின்னர் அந்த நபர் அங்கிருந்த விளக்கை அணைத்துவிட்டு அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார். இந்த பெண் கத்த முயன்றும் அவரால் கத்த முடியவில்லை. அந்த வார்டில் நோயாளி ஒருவர் மிக ஆபத்தான நிலையில் இருந்த காரணத்தினால் அந்த சம்பவம் யாருக்கும் தெரியவில்லை. பின்னர் நடந்ததை அப்பெண் தன்னுடைய குடும்பத்திடம் கூறியுள்ளார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் குடும்பத்தினர் அங்குள்ள காவல் நிலையத்தில் வார்டு பாய் மீது புகார் கொடுத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.