மறைந்த எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் கூட்டத்தில் ரசிகர் தவறவிட்ட செருப்பை எடுத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிரபல பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு திரைத்துறை மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இன்று சென்னை செங்குன்றத்தை அடுத்து இருக்கும் தாமரைபக்கத்தில் அமையப்பெற்றுள்ள அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பலர் வருகை தந்தனர்.
அவ்வகையில் நடிகர் விஜய்யும் அங்கு சென்றிருந்தார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் விஜய் அவர்களை முற்றிலும் சூழ்ந்து கொண்டனர். இதனால் விஜய்யை காவல்துறையினர் மிகுந்த பாதுகாப்புடன் அழைத்து சென்றபோது அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் விஜய்யின் ரசிகர்கள் சிலர் கீழே விழுந்து நெரிசலில் சிக்கினர். அச்சமயம் அதில் ஒருவரது காலனி கீழே கிடந்ததை பார்த்து நடிகர் விஜய் தானாக சென்று அதனை எடுத்து கொடுத்தது அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/i/status/1309774328209129473