Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைவிக்கு பயமில்லை” ஹீரோயின்கள் செய்யத் தயங்குவதை…. துணிந்து செய்யும் நயன்தாரா….!!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தமிழில் வெளியான ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதன்பின் நடிகர் ரஜினியுடன் சேர்ந்து நடித்த சந்திரமுகி படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து நடிகை நயன்தாரா நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்ததால் நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார். கடந்த மாதம் 9-ம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு திருப்பதி ஏழுமலையானை தரிசித்து விட்டு கேரளாவிற்கு மறு வீட்டிற்கு சென்றனர். அதன்பிறகு ஹனிமூனுக்காக தாய்லாந்துக்கு சென்ற விக்கி-நயன் ஜோடி திரும்பி வந்த பிறகு அவரவர் வேலையில் பிஸி ஆகிவிட்டனர். இந்நிலையில் நடிகை நயன்தாரா நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங்க்காக நடிகை நயன்தாரா மும்பைக்கு சென்றுள்ளார். இவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்னைக்கு வந்து தன்னுடைய காதல் கணவரை பார்த்து விட்டு செல்கிறார்.

மேலும் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வரும் நிலையில், நயன்தாரா பலரும் செய்ய தயங்கும் காரியத்தை தைரியமாக செய்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது திருமணமான நடிகைகள் யாரும் கழுத்தில் தாலி அணிய மாட்டார்கள். ஆனால் நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் கழுத்தில் மஞ்சள் கயிறுடன் கெத்தாக நடந்து செல்கிறார். மேலும் தலைவிக்கு தாலி அணிவதில் எந்த பயமும் இல்லை என்று ரசிகர்கள் பலரும் கூற அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Categories

Tech |