கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புகழ்ராயன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3- ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களாக புகழ்ராயன் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் இளங்கோவன் அவரை கண்டித்துள்ளார். இதனை அடுத்து வெளியே சென்று வருவதாக தனது தாயிடம் கூறிவிட்டு புகழ்ராயன் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில் போத்தனூர்-இருகூர் இடையில் இருக்கும் தண்டவாளத்தில் புகழ்ராயன் தலைவைத்து படுத்துள்ளார். இதனையடுத்து நள்ளிரவு நேரத்தில் அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதால் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே புகழ்ராயன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது காதல் தோல்வியினால் இந்த முடிவை எடுத்தாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.