Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தலை துண்டிக்கப்பட்டு ஏரியில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் அருகே சென்னசந்திரம் ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அந்த இடத்தில் கொலை நடந்ததற்கான தடயம் கிடைக்கவில்லை. எனவே வேறு எங்காவது அவரை வெட்டிக்கொலை செய்து விட்டு உடலை ஏரியில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்டவரின் தலை கிடைக்காததால் அவர் யார் என்ற விபரமும் தெரியவில்லை. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |