மெக்சிகோவில் தலை துண்டிக்கப்பட்ட 8 ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ மிச்கோகன் மாநிலத்தில் அகுயிலா நகராட்சி என்ராமாடா பகுதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள் மோதல் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டபோது துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் தலை துண்டிக்கப்பட்ட 8 ஆண்களின் சடலங்களை கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அடுத்தகட்ட விசாரணைகாகவும், பிரேத பரிசோதனைக்காகவும் உடல்கள் தடவியல் நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்த விசாரணையில் இறந்தவர்கள் யுனைடெட் கார்டேல்ஸ் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் என்றும் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் உறுப்பினர்களுடன் ஏற்பட்ட ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.