Categories
தேசிய செய்திகள்

தலை துண்டித்து கொடூர கொலை…. பெரும் பதற்றம்…. மாநிலம் முழுவதும் 1 மாதத்திற்கு 144 தடை உத்தரவு அமல்….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தையல்காரர் தலையை துண்டித்து கொடூர கொலை செய்யப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. அதனால் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிவி பேட்டி ஒன்றில் நபிகள் நாயகத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டவர் பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்தவர் நுபுர் சர்மா. இவர் மீது கட்சித்தலைமை நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் புட் மஹால் என்ற இடத்தில் தையல் கடை நடத்தி வருகின்ற தையல்காரர் கன்னையா டெலி என்பவர் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து வெளியிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இரண்டு பேர் கூர்மையான கத்திகள் உடன் அவரது கடைக்கு வந்து கழுத்தை அறுத்து தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். இதனை கொலையாளிகள் வீடியோ படம் எடுத்து வெளியிட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஆன சூழல் நிலவி வருகிறது. கொலையாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் ஒரு மாதத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |