தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா தொடங்கியது. அதில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியை ஏற்றுக் கொண்டனர். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஆனார் ஸ்டாலின்.
இந்நிலையில் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலினுக்கு இயக்குனர் சுரேஷ் காமாட்சி வாழ்த்து தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகள் கழித்து மக்கள் நம்பிக்கையோடு முதல்வர் பதவியை கொடுத்துள்ளனர். சீரும் சிறப்புமாக தமிழகத்தை தலை நிமிர் மாநிலமாக, கொள்கைப் பிடிப்போடு உயர்வு மாநிலமாக, எதிர்நிற்கும் சவால்களை தகர்ப்பு மாநிலமாக மாற்ற வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.