உங்கள் தலையில் உள்ள புண்களை சரி செய்ய இந்த இயற்கை வழிகளை பயன்படுத்துங்கள்.
தலையில் வியர்வை மற்றும் அழுக்கு காரணமாக சில சமயம் புண்கள் ஏற்படும். ஆனால் அதனை சரிசெய்ய முடியாமல் சில பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு தலையில் புண்கள் உள்ளவர்கள் வீட்டில் இருந்தே எளிமையாக இதனை பயன்படுத்தி வந்தால் பலன் கிடைக்கும். அதன்படி தலையில் புண் வராமல் தடுக்க சில இயற்கை வழிகள் உள்ளது.
வேப்ப இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அரைத்து விழுதாக்கி தலையில் தடவி 15 நிமிடங்கள் கழித்து விட்டு பிறகு தலை குளிக்கவும். இது தோல் மற்றும் சரும ரோகங்களுக்கு சிறந்த நிவாரணி அளிக்கிறது. மேலும் சுத்தமான தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது மிகவும் நல்லது.