Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தலை மீது உடைக்கப்பட்ட தேங்காய்…. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்…. சிறப்பாக நடைபெற்ற விழா…!!

குரும்பர் இன மக்களின் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்தி கடனை செலுத்தியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டையில் கவியரசர் ஸ்ரீ கனகதாசர் 534-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழாவானது குரும்பர் சங்கம் மற்றும் ஸ்ரீகனக ஜோதி சேவா சமிதி சார்பில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில் குரும்பர் இன மக்கள் பாரம்பரிய முறைப்படி குணிதா, வீரபத்திர குணிதா போன்ற நடனங்களுடன் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ கனகதாசர் பல்லக்கு மற்றும் குலதெய்வங்களை ஊர்வலமாக கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து லிங்கேஸ்வர சாமி, சிவலிங்கேஸ்வர தேவி, வீரபத்திர சாமி உள்ளிட்ட தெய்வங்களை வரிசையாக வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தியுள்ளனர். அதன்பின் குரும்பர் இன மக்களின் தலை மீது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தலை மீது தேங்காய்களை உடைத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தியுள்ளனர் . இந்த விழாவில் மாநில குரும்பர் இன தலைவர் பாபண்ணா, ஊராட்சி மன்ற தலைவர்கள் முரளி எளயப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |