Categories
லைப் ஸ்டைல்

தலை முடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு… வாரத்தில் ஒருமுறை இத மட்டும் பண்ணுங்க போதும்…!!!

தற்போதைய காலகட்டத்தில் தலைமுடி பிரச்சனை என்பது அனைவருக்கும் உள்ளது. அதில் தலைமுடி உதிர்வது, பொடுகு போன்ற பிரச்சனைகள் அதிகமாக உள்ளது. அதற்கு நிரந்தர தீர்வு காண இதை மட்டும் செய்து வந்தால் போதும். கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து, அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்றுவிடும். கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்து வர முடி உதிராது. அடர்த்தியாக நன்றாக வளரும். தலையும் குளிர்ச்சியாகும். செம்பருத்திப்பூவை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி, வடிகட்டிய பிறகு தலைக்கு தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது. கூந்தல் கருமையாக மாறும். கருவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயம்-4 சேர்த்து நன்றாக அரைத்து அதில் தயிர் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும். வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளித்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

Categories

Tech |