Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தலை முடி வளரணுமா… இந்த மட்டும் பண்ணுங்க போதும்…!!!

தலை முடி நன்கு வளர என்ன செய்வது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :

முடிக்கு மசாஜ்:

மசாஜ் என்றதும் அரை மணி நேரம் வரை என்றோ வெளியில் பார்லரில் போய் செய்யகூடியது போல என்றோ நினைத்துவிட வேண்டாம். எளிதாக உங்கள் கூந்தலுக்கு நீங்களே செய்துகொள்ள முடியும்.

அதிக செலவு செய்து எண்ணெய் வாங்க வேண்டிய அவசியமில்லை. சுத்தமான தேங்காயெண்ணெயே போதுமானது. அகலமான கிண்ணத்தில் சிறிதளவு தேங்காயெண்ணெய் விட்டு இலேசாக சூடாக்கவும். பொறுக்கும் சூட்டில் இரண்டு விரல்களால் தொட்டு அதை உச்சந்தலையில் நன்றாக வட்டவடிவில் படும்படி மசாஜ் செய்யுங்கள். 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் கூந்தலில் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு கூந்தலுக்கு வலு கிடைக்கும். முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

தினமும் தலைக்கு குளித்தல்: 

தலை குளியல் செய்வதால் கூந்தல் சுத்தமாகும் என்பது சரி. ஆனால் தினமும் தலைக்கு ஷாம்பு போட்டு குளிப்பதால் கூந்தலில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய் சுரப்பை தடுக்க கூடும். அதே போன்று தலை குளியலின் போது வெந்நீர் பயன்பாட்டை தவிர்ப்பதே நல்லது. கூந்தலுக்கு மந்தமான அல்லது குளிர்ந்த நீர் எப்போதுமே நன்மை செய்யகூடும்.

தேங்காய் எண்ணெய் :

கூந்தல் உடையாமல் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் தொடர்ந்து தலைகுளியலின் போது கண்டிஷனரை பயன்படுத்துவது நல்லது. தலைமுடி வறண்டு போகாமல் இருக்க தலைக்கு ஹேர் க்ரீம், சீரம், எண்ணெய் என்று உங்கள் கூந்தலுக்கு தேவையானதை நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் கூந்தலின் தன்மைக்கேற்ப பயன்படுத்துவதை மட்டும் கவனத்தில் கொண்டால் போதுமானது.தலை துவதுதல் :

கூந்தலில் தலைமுடியை உலர்த்துவது என்பது முக்கியமானது ஒவ்வொரு முறை தலைகுளியலுக்கு பின்பும் கூந்தலை உலர்த்த ஹேர் டிரையரை தவிர்க்க வேண்டும். அதே போன்று சிலர் தலைக்கு குளித்து முடித்ததும் டவலை கூந்தலின் மீது கட்டி கொள்வார்கள். இதனால் கூந்தலின் ஈரம் அப்படியே இருக்கும். காயவும் செய்யாது. கூந்தலை சுத்தமான பருத்தி துணியால் நெய்த டவலில் துடைத்து கூந்தலை முடிச்சி போடாமல் அப்படியே காயவிட  வேண்டும். மின் விசிறி அல்லது சூரிய ஒளியில் காயவிடுவது கூந்தலில் பாதிப்பை உண்டாக்காது.

Categories

Tech |