பணி செய்யும் இடங்களில் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் குறித்து டி.யு.சி ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள தொழிலாளர்கள் டி.யு.சி அமைப்பு பொதுமக்கள் பணி செய்யும் இடங்களில் அவர்களை கேலி செய்வது, தோற்றத்தை விமர்சிப்பது, கொடுமைப்படுத்துதல், துன்புறுத்துதல் போன்றவை குறித்து ஆய்வு ஒன்று செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 41 சதவீத கருப்பின மற்றும் சிறுபான்மை பிரிவை சேர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் 5 ஆண்டுகளில் பணி செய்யும் இடங்களில் இனவெறி பாகு பாட்டை அதிகளவில் எதிர்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.
மேலும் 25 வயது முதல் 34 வயது வரையிலான 52 சதவீத சிறுபான்மை தொழிலாளர்கள் இன பாகுபாட்டினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புகார் அளித்தாலும் அரசு பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்ளாது என்பதால் புகார் அளிக்கவில்லை என்று 44% பேர் தெரிவித்துள்ளனர்.