Categories
சினிமா

தல அஜித்தின் “ஏகே 61” திரைப்படம்….. ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் அஜித். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 படத்தில் நடிகர் அஜித் பிஸியாக உள்ளார். இதில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. படத்தின் பூஜை போடப்பட்டதை தவிர அதன் பிறகு படத்தை குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.இருந்தாலும் படத்தைப் பற்றிய தகவல்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில் ஏகே 61 திரைப்படத்தின் பணிகள் முடிந்து இந்த ஆண்டு வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டு வந்த நிலையில் இன்னும் அதன் படப்பிடிப்பு முடியாதது அஜித் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.குறிப்பாக இன்னும் படத்தின் பெயர் மற்றும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட எதுவும் வெளியாகாமல் இருப்பது ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. தற்போது #AK61Update என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Categories

Tech |