Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்தின் வலிமை…. ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்….!!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும், பலகோடி ரசிகர்களின் பேவரட் ஹீரோவாகவும் தல அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. முன்னணி தயாரிப்பாளர் போனி கபூரின் பே வியூ புராஜெக்ட்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வருகிற ஜனவரியில் ரிலீசாக உள்ளது.

சதுரங்க வேட்டை, தீரன் மற்றும் நேர்கொண்டபார்வை படங்களை இயக்கிய இயக்குனர் H. வினோத் இயக்கியுள்ள வலிமை திரைப்படத்தில் அஜீத் குமாருடன் இணைந்து ஹீமா குரேஷி, யோகி பாபு, விஜய் டிவி புகழ் ஆகியோர் நடிக்க, வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

மேலும் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் வலிமை திரைப்படத்தை கோபுரம் சினிமாஸ் வெளியிடுகிறது. இந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை E4என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |