சினிமாவில் நடிகர் அஜித் அறிமுகமானதற்கு எஸ்.பி.பி தான் காரணமாக இருந்திருக்கிறார்.
தமிழ் திரையுலகில் அமராவதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அஜித். இதற்கு முன் இவர் பிரேம புஸ்தகம் என்கிற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அஜித் நடிப்பதற்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் அஜித் அறிமுகமாவதற்கு காரணமும் எஸ்.பி.பி தான். அமராவதி பட இயக்குனர் செல்வா எஸ்.பி.பி-யிடம் ஒரு காதல் படத்திற்கு இளம் கதாநாயகனை பரிந்துரை செய்யுமாறு கேட்டுள்ளார். அப்போது அவரிடம் எஸ்.பி.பி அஜித் பற்றியும், தெலுங்கு படம் பற்றியும் கூறியுள்ளார். இதன்பின் அஜித் அமராவதி படத்தின் கதாநாயகன் ஆனார். மேலும் பேட்டி ஒன்றில் அஜித் பற்றி பேசிய எஸ்.பி.பி, ‘அஜித்தும், சரணும் பள்ளித் தோழர்கள்.
அஜித் என் வீட்டுக்கெல்லாம் வருவார். பார்க்க நன்றாக இருப்பார். அவருக்கு 16, 17 வயதில் விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல சட்டை வேண்டும் என சரணிடம் சட்டை வாங்கி சென்றார். அது நன்றாக எனக்கு நினைவில் இருக்கிறது. அப்போது அவர் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். கொல்லபுடி மாருதி ராவ் சார் தனது படத்திற்கு அழகான, நல்ல தோற்றம் கொண்ட புதுமுகத்தை தேடிக்கொண்டிருந்தார். எனக்கு அஜித் ஞாபகம் வந்தது. என் மகனின் தோழன் ஒருவன் இருக்கிறான் பார்க்கிறீர்களா?, என கேட்டதும் அந்த வாய்ப்பை அவர் அஜித்துக்கு வழங்கினார்’ என கூறியுள்ளார்.