Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித் நடித்த “பில்லா” படத்தில் கவர்ச்சியாக நடித்தது ஏன்….? உண்மையை போட்டுடைத்த நயன்தாரா….!!!!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகை நயன்தாரா பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியின் போது நடிகை நயன்தாரா பில்லா படத்தில் கவர்ச்சியாக நடித்தது குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, பில்லா படம் பண்ணும் போது இயக்குனர் விஷ்ணுவர்தனை தவிர யாருக்குமே என் மீது நம்பிக்கை கிடையாது. ஏனெனில் பில்லா படத்திற்கு முன்பாக யாருமே என்னை ஸ்டைலிஷ் ஆக கிளாமராக பார்த்தது‌ இல்லை.

அந்த நேரம் நான் ஹோம்லி கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது விஷ்ணு வர்தனும் அவருடைய மனைவி அனுவர்தனும் தான் என்னை நம்பினர். அனுவர்தன் காஸ்டியூம் டிசைனர் என்பதால் அவர் வடிவமைத்த ஸ்டைலிங்கான காஸ்டியூம் தான் என்னை வித்தியாசப் படுத்தி காண்பித்தது. இப்படிப்பட்ட கதாபாத்திரத்திலும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்ட வேண்டியது இருந்ததால், அந்த கதாபாத்திரத்தில் என்னால் கிளாமராக நடிக்க முடிந்தது என்று கூறியுள்ளார். மேலும் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான பில்லா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அப்போது நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |