Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித் படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் அஜித்தின் ஏகன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் அஜித்துக்கு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘நீங்கள் வாழ்வில் பல சோதனைகளைக் கடந்து சாதனைகள் படைத்தது போல் இன்று இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு இனிய பொன் விழா ஆண்டு நல்வாழ்த்துக்கள்’ என பதிவிட்டு அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அஜித்தின் ஏகன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த காட்சியின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |