Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித் பாடலின் புதிய சாதனை…10,00,00,000 பார்வையாளர்கள்…ரசிகர்கள் கொண்டாட்டம்…!!

நடிகர் அஜித் நடிப்பில் 2019 இந்த ஆண்டில் வெளிவந்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் புதிய சாதனையை படைத்துள்ளது .

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் விஸ்வாசம் .இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா,காமெடி நடிகர்களாக யோகிபாபு ,ரோபோசங்கர்,ஆகியோர் நடித்திருந்தனர்.இந்தப்படத்திற்கு இமான் இசையமைத்தார்.ஒரு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சணையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

visvasam க்கான பட முடிவு

கடந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியான இந்த படம் அதிக அளவில் வசூல் சாதனை படைத்தது.இந்தப்படத்தில் அப்பா மகளை கருவாகக் கொண்டு எழுதப்பட்ட “கண்ணான கண்ணே” என்ற பாடல் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது. இப்பாடலை பாடலாசிரியர் தாமரை எழுதியிருந்தார்.இப்போது இந்தப்பாடல் 10,00,00,000 பார்வையாளர்களை கடந்து சென்று சாதனை படைத்துள்ளது.

கண்ணான கண்ணே க்கான பட முடிவு

இந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடும் விதமாக ட்விட்டரில் #100loveforkannanakanne என்ற ஹேஸ்டாக்கை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.இப்பாடல் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த பாடல்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |