நடிகை நிவேதா பெத்துராஜ் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து படத்தின் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதை தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், சங்கத்தமிழன், திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்துள்ள பொன்மாணிக்கவேல் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் நடிகை நிவேதா பெத்துராஜ் கார் ஓட்டுவதில் அதிகம் விருப்பம் கொண்டவர்.
இந்நிலையில் ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித் பாணியில் கார் ரேஸில் கலக்கும் நிவேதா பெத்துராஜ்க்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.