ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஷபானா.இவர் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த நடிகர் ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் இவரின் காதலுக்கு இருவர் வீட்டிலும் சம்மதம் கிடைக்கவில்லை. இதனால் மிக எளிமையான முறையில் கடந்த வருடம் இவர்களின் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த வருடம் இந்த ஜோடியை தனியாகவே தல தீபாவளியை கொண்டாடுவார்கள் என பலரும் கூறிவந்த நிலையில் ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் யாரு சொன்னாங்க நாங்க தனியா தான் தல தீபாவளி கொண்டாட போகிறோம் என்று, எங்களுடன் எப்போதும் இருப்பதற்கு நன்றி அப்பா எம்எஸ் பாஸ்கர் என அவர் பதிவிட்டுள்ளார்.அதாவது நடிகர் எம் எஸ் பாஸ்கர் உடன் இணைந்து ஷபானா மற்றும் ஆரியன் தங்களது தல தீபாவளியை மூவராக கொண்டாடியுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க