நடிகர் அஜித் பஸ் ஸ்டாண்டில் மக்களோடு மக்களாக சாதாரணமாக நடந்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது. ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது .
Latest video of #ThalaAjith ❤️😍#AjithKumar || #Valimai pic.twitter.com/pNDqhBBXmr
— Sheik Akthar (@SheikAkthar77) April 12, 2021
சமீபத்தில் நடிகர் அஜித் ஓட்டுபோடும் இடத்தில் மாஸ்க் அணியாமல் வந்த தனது ரசிகரின் போனை பிடுங்கி வைத்துக் கொண்டு பிறகு மாஸ்க் போட வேண்டும் என அறிவுரை கூறி அவரிடம் போனை திருப்பி கொடுத்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நடிகர் அஜித் பஸ்ஸ்டாண்டில் மக்களோடு மக்களாக சாதாரணமாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.