Categories
சினிமா தமிழ் சினிமா

‘தல 61’ படத்தின் இசையமைப்பாளர் இவரா?…. வெளியான செம மாஸ் அப்டேட்….!!!

தல 61 படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படம் உருவாகியுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியிருந்தது.

Ajith Kumar's Thala 61: Anirudh Ravichander Joins The H Vinoth Directorial  - Filmibeat

தற்போது வலிமை படம் மூலம் மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இதை தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க இருக்கிறார். இந்நிலையில் ‘தல 61’ படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |