அஜித்தின் 61-வது படத்தை போனிகபூர் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் கடைசியாக நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியிருந்தது. ஹெச்.வினோத் இயக்கியிருந்த இந்த படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வலிமை படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை தினத்தில் தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது.
இந்நிலையில் அஜித்தின் 61-வது படத்தையும் போனி கபூர் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சமீபத்திய பேட்டியில் போனி கபூரே தெரிவித்துள்ளார். மேலும் அவர் தல 61 படத்தை நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.