Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா

தளபதிக்கே சவாலா…. ஒரே நாளில் வென்ற விஜய்…. உற்சாகத்தில் ரசிகர்கள் …!!

தெலுங்கு திரையுலகின் நடிகரான மகேஷ் பாபு நடிகர் விஜய்க்கு விடுத்த சவாலை அவர் ஏற்றுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களாக கொரோனா இந்திய நாட்டையே முடக்கி போட்டுள்ளது. ஒட்டுமொத்த பொருளாதாரமும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு, பொழுதுபோக்கு நிறுத்தப்பட்டு அனைத்து பிரபலங்களும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. வீட்டில் இருந்து  கடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் ட்விட்டர் மூலமாக பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார்   ‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ என்ற மரம் நடும் சேலஞ்ச் ஒன்றை உலக சுற்றுச் சூழல் தினத்தன்று தொடங்கி வைத்தார். இந்தியாவில் உள்ள திரையுலக பிரபலங்கள் அரசியல்வாதிகள் மரம்  நடுவதை சவாலாக செய்து வந்தனர். தெலுங்கு திரையுலக பிரபலங்களான பிரபாஸ், நாகர்ஜுனா, சமந்தா, ராஷ்மிகா மந்தனா, ராஷி கண்ணா ஆகியோர் இந்த சவாலை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிறந்த நாள் கொண்டாடிய மகேஷ்பாபு மரம் நடும் சவாலை செய்யுமாறு  நடிகர் விஜய், நடிகை ஸ்ருதிஹாசன், ஜூனியர் என்டிஆர் ஆகியோரை கேட்டுக்கொண்டுள்ளார்.  மகேஷ் பாபுவின் சவாலை ஏற்கும் வகையில் நடிகர் விஜய் தற்போது வீட்டில் அமர்ந்துகொண்டு மரங்களை நட்ட போட்டோவை பதிவிட்டுள்ளார். தெலுங்கு பிரபல மகேஷ்பாபு நடிகர் விஜய்க்கு விடுத்த சேலஞ்சை நடிகர் விஜய் தற்போது நிறைவேற்றி உள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 

Categories

Tech |