நடிகர் தனுஷ் படம் வசூலில் சாதனை படைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். இவர் தற்போது மித்ரன் ஜவகர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிலேயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படம் கடந்த 11 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 70.75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் வசூலை திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஓவர் டேக் செய்து விட்டது. அதாவது தமிழகத்தில் பீஸ்ட் திரைப்படத்தின் மொத்த வசூல் 65.45 கோடியாகும். ஆனால் திருச்சிற்றம்பலம் படம் 70 கோடியை தாண்டி வசூலில் புதிய சாதனை படைத்து வருவதோடு, வருகிற நாட்களில் வசூல் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த குஷியில் இருக்கின்றனர். மேலும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகை நித்யாமேனனின் கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.