Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதியின் வாரிசு படம் நடிகர் மகேஷ்பாபு படத்தின் ரீமேக்கா….? உண்மையை போட்டுடைத்த தில் ராஜு….!!!!

பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் நடிகர் விஜய் தற்போது வாரிசு  என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு மகேஷ்பாபு நடிப்பில் தெலுங்கில் வெளியான மகரிஷி படத்தின் ரீமேக் என்று பலராலும் கூறப்பட்டது. இது தொடர்பான சர்ச்சைகளுக்கு வாரிசு இசை வெளியீட்டு விழாவின்போது தயாரிப்பாளர் தில் ராஜு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் கூறியதாவது, வாரிசு திரைப்படம் எந்த ஒரு படத்தின் ரீமேக்கோ அல்லது தொடர்ச்சியோ கிடையாது.

இந்த படத்தை குடும்பத்துடன் சேர்ந்து அனைவரும் பார்க்க வேண்டிய படம். இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதோடு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மட்டுமின்றி ஹிந்தியிலும் சூப்பர் ஹிட் ஆகும். நடிகர் விஜய் சினிமாவில் மட்டும் சூப்பர் ஸ்டார் கிடையாது. அவர் நிஜத்திலும் சூப்பர் ஸ்டார் தான். நான் முதன்முதலாக நடிகர் விஜய்யை பார்க்க சென்றபோது அவரே எனக்கு காபி கொடுத்து வரவேற்றார். நாங்கள் அரை மணி நேரம் தான் கதை சொன்னோம். அதைக் கேட்டவுடன் விஜய் உடனே படத்தை பண்ணலாம் என்று கூறிவிட்டார் என்று நெகிழ்ச்சியோடு கூறினார். மேலும் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |