பாடலாசிரியர் கபிலன் நடிகர் விஜய்யுடன் இணைந்து எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் ஏராளமான பாடலாசிரியர்கள் இருந்தாலும் சிலர் மட்டுமே மக்களால் பெரிய அளவில் அங்கீகாரம் பெறுகின்றனர் . அப்படி பல ஹிட் பாடல்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் பாடலாசிரியர் கபிலன். சமூக வலைத்தளங்களில் இவர் எப்போதும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.
மேலும் இவர் பல பிரபலங்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் விஜய்யுடன் பாடலாசிரியர் கபிலன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தளபதி விஜய் செம ஸ்மார்ட்டாக இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது.