தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் பிகில் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை அட்லி இயக்க நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார்.
பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பிகில் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கால்பந்து வீராங்கனைகளாக நடித்த சிலர் தற்போது ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் பிகில் திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனையாக காயத்ரி ரெட்டி என்பவர் நடித்திருந்தார். இவருக்கு தற்போது திருமணம் ஆகியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை இணையதளத்தில் காயத்ரி ரெட்டி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.