Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதியை வைத்து ஜேம்ஸ்பாண்ட் படம் இயக்க ஆசைப்படும் மிஷ்கின்… அவரே சொன்ன சூப்பர் தகவல்…!!!

இயக்குனர் மிஷ்கின் நேற்று டுவிட்டர் ஸ்பேஸில் தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார் .

தமிழ் திரையுலகில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, துப்பறிவாளன், பிசாசு, சைக்கோ போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்கத்தில் பிசாசு-2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Famous Director Who Wants To Make Vijay James Panda: Mishkin Open Minded On  Twitter Space! - Jsnewstimes

இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் நேற்று டுவிட்டர் ஸ்பேஸில் தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் ‘நடிகர் விஜய்யை வைத்து நீங்கள் படம் இயக்கினால் அவருடைய கதாபாத்திரம் என்னவாக இருக்கும் ?’ என கேட்டுள்ளார். இதற்கு மிஷ்கின் ‘ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம்’ என பதிலளித்துள்ளார்.

Categories

Tech |