தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சில மக்கள் தினமும் உண்பதற்கு உணவு இல்லாமல் தவித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கும் வகையில் தளபதி கிச்சன் என்னும் பெயரில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைவருக்கும் உணவு வழங்கும் புதிய திட்டத்தை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்துள்ளார். கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் மூலம் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.