Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி தான் டான்ஸிங் ரோஸ்’… இது எப்படி இருக்கு… ஆர்யாவின் வைரல் டுவீட்..‌.!!!

ரசிகர் ஒருவர் எடிட் செய்த வீடியோவை ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பா.ரஞ்சித் இயக்கியிருந்த இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சபீர், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்ஸிங் ரோஸ் குறித்து பசுபதி பேசும் வசனத்துடன் நடிகர் விஜய் நடனமாடும் காட்சிகளை வைத்து எடிட் செய்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் ‘தளபதி தான் டான்ஸிங் ரோஸ். இது எப்படி இருக்கிறது ஆர்யா’ என கேட்டுள்ளார். இதற்கு ஆர்யா அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஃபயர் எமோஜியை பதிவு செய்து அந்த ரசிகருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |