விஜய் அரசியல் கட்சி தொடங்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் அவரது ரசிகர்கள் மொட்டை அடித்தனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரசிகர்கள் மூன்று பேர் பரிமள ரங்கநாதர் கோவிலில் மொட்டையடித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். திரையுலகிற்கு வந்து 27 ஆண்டுகள் ஆனதையொட்டியும், விஜய் அரசியலுக்கு வர வேண்டியும் ரசிகர்கள் இந்த வழிப்பாட்டை நடத்தினர். முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் டிசம்பரில் அறிவிப்பு, ஜனவரியில் அரசியல் கட்சி தொடக்கம் என அரசியல் வருகையை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories