நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.
அப்போது ரசிகர் ஒருவர் ‘தளபதி விஜய்யை பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்’ எனக் கேட்டுள்ளார். இதற்கு ரஷ்மிகா ‘லவ்’ என பதிலளித்துள்ளார். மேலும் விஜய்யுடன் எப்போது நடிப்பீர்கள்? என்ற கேள்விக்கு ரஷ்மிகா ‘விரைவில்’ என பதிலளித்துள்ளார். எனவே நடிகர் விஜய்யின் அடுத்த படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.