Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி பிறந்தநாளில் டபுள் ட்ரீட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் விஜய்யின் பிறந்தநாளில் தளபதி 65 படத்தின் போஸ்டரும், தளபதி 66 படத்தின் அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கவுள்ளதாகவும் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Watch: Thalapathy Vijay spotted at the Chennai airport | Tamil Movie News -  Times of India

இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன்-22 அன்று தளபதி 65 படத்தின் போஸ்டரும், தளபதி 66 படம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதனால் தளபதி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |