ஈரான் படைத்தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த அமெரிக்காவும் காரணம் என அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஈரான் நாட்டின் முக்கிய தளபதியான காசிம் சுளைமாணி அமெரிக்கப் படையினரால் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனால் ஈராக்கில் இயங்கிவந்த அமெரிக்க இராணுவத் தளத்தை ஈரான் ராணுவம் தாக்கியது. இதில் நூற்றுக்கும் அதிகமான அமெரிக்க வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது. ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார தடை விதித்து வந்ததால் ஈரான் பெரும் பொருளாதார சரிவை சந்திக்கும் சூழலுக்குத் தள்ளப் பட்டது. இந்நிலையில் காசிம் சுளைமாணி கொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்டும் காரணம் இல்லை மொத்த அமெரிக்காவும் தான் காரணம் என்று ஈரான் அரசு குற்றம்சாட்டியதோடு கோழைத்தனமான தாக்குதலுக்கு அமெரிக்கா பதில் சொல்லவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.