நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்யின் 65-வது திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன், விடிவி கணேஷ், ஷைன் டாம் ஷாக்கோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் லைவாக வந்த பூஜா ஹெக்டேவிடம் ரசிகர்கள் பீஸ்ட் பட அப்டேட் கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த பூஜா ஹெக்டே ‘தற்போது பீஸ்ட் படத்தின் அப்டேட்களை கூற முடியாது. இயக்குனர் நெல்சனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளார். மேலும் அவர் இன்று நடக்கவுள்ள படப்பிடிப்பில் இணைய இருப்பதாக தெரிவித்துள்ளார்.