Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திற்கு கிடைத்த சான்றிதழ்… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு யு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா ,சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா ஊரடங்கால் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது . இதையடுத்து மாஸ்டர் படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல்கள் வெளியானது . ஆனால் படக்குழு அதனை மறுத்தது.

இந்நிலையில் மாஸ்டர் படத்திற்கு யு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு ட்விட்டரில் அறிவித்துள்ளது. மேலும்  2021 -ல் ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் படம் திரைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் உற்சாகத்தில் உள்ளனர் விஜய் ரசிகர்கள்.

Categories

Tech |