Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய்யுடன் மோதும் தல அஜித்….? செம குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் மஞ்சுவாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் முதல் மற்றும் 2-ம் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று காலை அஜித் படப்பிடிப்பிற்காக பாங்காக் விமானத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் துணிவு படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது துணிவு படத்தை அடுத்த வருட பொங்கலுக்கு பட குழுவினர் வெளியிட திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சாம், பிரகாஷ்ராஜ், குஷ்பூ மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் ஏற்கனவே பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தல அஜித்தின் துணிவு திரைப்படமும் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீசாகும் என்ற தகவல் தற்போது வெளியானதால் தல மற்றும் தளபதி ரசிகர்கள் மிகுந்த குஷியில் இருக்கின்றனர்.

Categories

Tech |