Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய் குறித்து மனம் திறந்த பூஜா ஹெக்டே…. என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க….!!!

பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து பூஜா ஹெக்டே மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Pooja Hegde roped in as Vijay's co-star in Thalapathy 65

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து விழா ஒன்றில் பூஜா ஹெக்டே மனம் திறந்து பேசியுள்ளார். அதில் ‘விஜய்யுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அனைவரையும் ஒரே மாதிரி நடத்துவார். மிகவும் எளிமையான மனிதர். அவருடன் நடனமாடியது எப்படி இருக்கிறது என்று ரசிகர்கள் தான் படம் பார்த்து விட்டு சொல்ல வேண்டும்’ என கூறியுள்ளார்.

Categories

Tech |